Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவ படிப்பு சேர்ந்த மாணவர்கள் NEET கோச்சிங் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறதா? RTI கூறுவது என்ன?

ராஜன் கொடுத்த அறிக்கையில் பக்கம் 79,80-இல் தெளிவாக, "2019-20 மருத்துவ படிப்பில் சேர்ந்த 99% மாணவர்கள் NEET கோச்சிங் பயிற்சி பெற்றவர்கள்", என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ படிப்பு சேர்ந்த மாணவர்கள் NEET கோச்சிங் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறதா? RTI கூறுவது என்ன?

Yuvaraj RamalingamBy : Yuvaraj Ramalingam

  |  12 Jan 2022 7:05 AM GMT

NEET தேர்வில் விலக்கு கேட்டு அதன் பாதகங்களை விளக்கும் விதமாக தி.மு.க அரசாங்கம் அமைந்தவுடன் நீதிபதி A.K.Rajan தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. நடுநிலையாக இருந்து ஆராய வேண்டிய AK ராஜன், முதல் நாளே NEET-ஐ விமர்சித்து பேட்டி கொடுத்து நம்மை வியப்புக்கு உள்ளாக்கினார்.

அதன் பின்னர் அக்குழு தனது அறிக்கையை சமர்பிக்கிறது. பல இடங்களில் சில முக்கிய தகவல்கள் விடுபட்டு இருந்தது. அதே போல கொடுத்த பல தகவல்களுக்கான ஆதாரங்கள் தெளிவாக கொடுக்கப்படவில்லை.

ராஜன் கொடுத்த அறிக்கையில் பக்கம் 79, 80-இல் தெளிவாக குறிப்பிடுகிறார், "It signifies that of the students who secured admission in the year 2019-20, 99% students had received prior training before the NEET". 2019-20 மருத்துவ படிப்பில் சேர்ந்த 99% மாணவர்கள் NEET கோச்சிங் பயிற்சி பெற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல September 24 2021 அன்று India Ahead News தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இந்த தகவல் அரசாங்கத்தின் சுகாதாரத் துறை கொடுத்ததாக குறிப்பிடுகிறார்.

அதை முன் வைத்து 24/09/2021 அன்று நான் (Yuvaraj Ramalingam) RTI சட்டத்தின் கீழ் இத்தகவலுக்கான ஆதாரத்தை கோரி விண்ணப்பம் செய்தேன். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது என்பதால் முதலில் மனிதவள மேம்பாட்டு பிரிவுக்கு அனுப்பப்பட்டு பின்னர் கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அது தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு அனுப்பப்பட்டது.

கேள்வி: மருத்துவ இடங்களை பெற்ற 99% மாணவர்கள் NEET Coaching சென்றவர்கள் என்று AK ராஜன் குழு குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை கொடுக்கவும்.

22/11/2021 வந்த RTI பதில் மற்றும் அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் கொடுத்த மேல்முறையீட்டில் வந்த பதில், "RTI சட்டத்தின் படி எங்களிடம் உள்ள தகவலை மட்டுமே கொடுக்க இயலும். இல்லாத தகவல்களை புதிதாக தயாரித்து கொடுக்க இயலாது" என்பது தான். சுருக்கமாக அவர்களிடம் தகவல் இல்லை. இந்த தகவல் India Ahead News Channel வெளியிட்டது.

பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை IPS மற்றும் பத்திரிகையாளர்கள் அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் இச்செய்தியை பகிர்ந்து தமிழக அரசிடம் கேள்வி கேட்டார்கள்.

ஆனால் இந்நிமிடம் வரை தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.பதில் அளிக்குமா தமிழக அரசு?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News