Kathir News
Begin typing your search above and press return to search.

வீடு திரும்பிய ராமர்‌: நியாயத்தின்‌ வெற்றி.. நம்பிக்கையின்‌ வெற்றி..

வீடு திரும்பிய ராமர்‌: நியாயத்தின்‌ வெற்றி.. நம்பிக்கையின்‌ வெற்றி..

Arun KrishnanBy : Arun Krishnan

  |  22 Jan 2024 4:36 PM GMT

காலச்‌ சக்கரத்தில்‌, உங்களை எல்லாம்‌, சற்றே பின்னோக்கி அழைத்து செல்கிறேன். குறிப்பாக, கி.பி 1528-ம்‌ காலக்‌ கட்டத்திற்கு. தைமூரிய வம்சாவளியைச்‌ சேர்ந்த பாபர்‌, பானிபட்‌ போரில்‌ வெற்றிக்‌ கொண்டதன்‌ விளைவாக, தில்லியில்‌ ஆட்சி செய்துக்‌ கொண்டிருக்கிறான்‌. அவனுடைய தளபதிகள்‌, கங்கை-யமுனை கரைகளில்‌ உள்ள ஊர்களிலும்‌, கிராமங்களிலும்‌, கொள்ளையழடுத்துக்‌ கொண்டும்‌, சூறையாடிக்‌ கொண்டும்‌, கொலை, கற்பழிப்பு என தகாத செயல்களில்‌ ஈடுபட்ட வண்ணம்‌, அராஜகம்‌ செய்துக்கொண்டு இருக்கின்றனர்‌.

இச்சூழலில்‌, உங்களை ஒரு அயோத்தி பிரஜையாக கற்பனை செய்து பாருங்கள்‌. கோவில்களை இழுத்து, நிர்மூலமாக்கி, பெண்களைக்‌ கற்பழித்து, அடிமைப்படுத்தி, துன்புறுத்த, மக்களைக்‌ கொலை செய்யவும்‌ அஞ்சாத ஒரு நாசக்கார தைமூரிய படை, உங்கள்‌ ஊர்‌ நோக்கி வரும்‌ செய்தி உங்கள்‌ காதுகளில்‌ எட்டினால்‌, உங்கள்‌ நிலை எப்படி இருக்கும்‌? உங்கள்‌ குடும்பத்தை எண்ணி, உங்கள்‌ தாயை, மனைவியை, சகோதரிகளை, பிள்ளைகளை எண்ணி, உங்கள்‌ அடி வயிற்றில்‌, விவரிக்க முடியாத ஒரு அச்சம்‌ நிச்சயம்‌ எழும்‌. இச்சூழலில்‌, அயோத்தியில்‌ பிறந்த ஒரு க்ஷத்ரியராக உங்களைக்‌ கற்பனை செய்து பாருங்கள்‌.


செய்‌, அல்லது செத்து மடி என்பது போல்‌, நீங்கள்‌ எதிரிகளுடன்‌ போராடி, இந்த பழைய, புனிதமான, ஸ்ரீ ராமர்‌ பிறந்த மண்ணைக்‌ காப்பது, அல்லது போரில்‌ உயிரைத்‌ துறப்பதென முடிவு எடுக்கிறீர்கள்‌. இதோ, போருக்கு செல்வதற்கு முன்‌, ராம்கோட்டின்‌ உச்சியில்‌ உள்ள ராமர்‌ கோவிலில்‌ இருக்இறீர்கள்‌. மனம்‌ ஒருமுகப்பட்டு, எந்த அச்சமும்‌, தயக்கமும்‌ இல்லாமல்‌, உங்கள்‌ வாள்‌, எதிரியின்‌ மீது உறுதியாக விழ வேண்டுமென பிரார்த்தனை செய்கிர்கள்‌.

உங்கள்‌ வீட்டுப்‌ பெண்கள்‌, உங்கள்‌ நெற்றியில்‌ திலகமிட்டு, திரும்பி வருவீர்களோ, மாட்டீர்களோ என துளியும்‌ எண்ணாமல்‌, கலங்காத கண்களுடன்‌, உங்களை வழியனுப்பி வைக்‌கிறார்கள்‌. ஒரு புனிதமான காரணத்திற்க்காக, உங்களை விட, என்ணிக்கையில்‌ வீரர்கள்‌ கொண்ட எதிரியை, உங்களிடம்‌ இருப்பதை விட, பலமடங்கு மேலான ஆயுதங்கள்‌ கொண்ட எதிரியை, போரில்‌ எதிர்த்து நிற்டுறீர்கள்‌. இறுதியில்‌, வீழ்ந்தும்‌ விடுகிறீர்கள்‌; வீரமான மரணம்‌, ஆயினும்‌, பயனற்ற மரணம்‌. இப்பொழுது, உங்களை அயோத்தியின்‌ ஒரு சாதாரண பிரஜையாக கற்பனை செய்துக்‌ கொள்ளுங்கள்‌.

உங்கள்‌ கண்‌ முன்னே இந்த காட்சி விரிகிறது. வெற்றியின்‌ மமதையுடன்‌, அயோத்திக்குள்‌ நுழைகிறான்‌. அவனுடைய படை வீரர்களின்‌ ஈட்டியில்‌, அயோத்தி வீரர்களின்‌ துண்டிக்கப்பட்ட தலைகளும்‌, ரத்தக்‌ கறை பதிந்த உடைகளும்‌, உடைந்த வாள்களும்‌. இதோ, மீர்‌ பாஜியின்‌ கொள்ளைப்‌ படை, தன்‌ சூறையாடலை துவக்கி விட்டது. பெண்களின்‌ கூக்குரல்‌ உங்கள்‌ செவிகளை எட்டுகிறது. அவர்களின்‌ கணவரின்‌ முன்னே, சகோதரர்கள்‌ முன்னே, குழந்தைகள்‌ முன்னேயே, அவர்கள்‌ களவாடப்‌ படுகிறார்கள்‌. எங்கோ உள்ள பக்தர்கள் அடிமைகளாக விற்கப்படுவதற்கு, அயோத்தியின்‌ அப்பாவிக்‌ குழந்தைகள்‌, கடத்தப்படுவதைப்‌ பார்த்து, உங்கள்‌ கண்கள்‌ கலங்கத்‌ தான்‌ செய்யும்‌. சாலைகள்‌ முழுதும்‌ வழியும்‌ ரத்த ஆறு, புனித சரயு நஇயையும்‌ விட்டு வைக்கவில்லை.

கோவில்களில்‌ இருக்கும்‌ பிராம்மணர்களின்‌ பரிதாபமான நிலையை சற்றே எண்ணிப்பாருங்கள்‌. நிராயுதபாணியாய்‌, மந்திரங்கள்‌ மற்றும்‌ பிரார்தனைகளின்‌ துணையோடு மட்டும்‌, தங்களைக்‌ காப்பற்ற, அந்த ராமனின்‌ முன்‌ நிற்பது தெரிகிறதா?இந்த நாகரீகமற்ற, மூர்க்க, தைமூரிய படை வீரர்கள்‌, தங்கள்‌ கோவில்களை நாசம்‌ செய்யும்‌ பொழுது, அவர்களுக்குள்‌ எழக்கூடிய அச்சத்தை கற்பனை செய்து பாருங்கள்‌.

உங்கள்‌ மனக்கண்களில்‌, இந்தக்‌ காட்சியை வரைந்து பாருங்கள்‌. நாசக்காரப்‌ படை, கோவிலை ஆக்கிரமித்து இருக்கிறது. இலைகளும்‌, விக்கிரகங்களும்‌ சிதைக்கப் படுகின்றன. அவைகளின்‌ செவிகளும்‌, மூக்குகளும்‌ வெட்டப்படுகின்றன. எதிர்த்து வந்த பிராமணர்கள்‌ தாக்கப்படுகன்றனர்‌. கடப்பாறைகள்‌ கொண்டு, கோவிலின்‌ மதில்‌ சுவர்கள்‌ இடித்து தரை மட்டமாக்கப் படுகின்றன. இதோ பாருங்கள்‌, மீர்‌ பாகி, குதிரையில்‌ அமர்ந்தபட, கோவிலின்‌ கர்ப்ப கிரகத்துற்குள்‌ நுழைந்து, ராம்‌ லல்லாவின்‌ விக்ரகத்தை இடித்துத்‌ தள்ளுகிறான்‌. அவனுடைய படை வீரர்கள்‌, விக்கிரகத்தின்‌ மீது ஏறி குதியாட்டம்‌ போடுகிறார்கள்‌. அவர்களுடைய ஆணவச்‌ சிரிப்பு உங்களுக்கு கேட்கிறதா?


அயோத்தியின்‌ சாதாரண பிரஜையின்‌ மனக்குமுறலை கற்பனை செய்து பாருங்கள்‌. அவர்கள்‌ புனிதமென கொண்டாடிய கோவில்‌ இருந்த இடத்தில, மீர்‌ பாகி ஒரு மசூதியைக்‌ கட்ட துவங்குகிறான்‌;அதுவும்‌ அதே கோவிலின்‌ கற்களைக்‌ கொண்டு. சற்றே உன்னிப்பாய்‌ கேட்டுப்‌ பாருங்கள்‌, அவர்களுடைய ஊமைக்‌ கதறல்‌ உங்கள்‌ செவிகளை வந்து அடையும்‌. யாருக்கு தெரியும்‌, ஒரு வேளை, உடைக்கப்பட்ட ராமரின்‌ விக்‌இரகம்‌, மசூதியின்‌ வாயிற்படியாக கூட மாறியிருக்கக்கூடும்‌; நாசக்காரர்கள்‌ வேண்டுமென்றே கால்‌ மிதித்து செல்லவும்‌, நாட்டு மக்களை மேலும்‌ இழிவு படுத்தவும்‌. சில நூற்றாண்டுகள்‌ கடந்து செல்வோம்‌. தைக்கப்பட்ட, பாழாக்கப்பட்ட அந்த நகரத்தை கற்பனை செய்து பாருங்கள்‌.

இதைவுக்கு மத்தியில்‌, இந்துக்கள்‌ புண்ணிய பூமி என கொண்டாடிய இடத்தில்‌, ஒரு மசூதி எழுந்து நிற்கிறது. ஆனால்‌, வேடிக்கை என்னவென்றால்‌, இந்துக்கள்‌ இன்னமும்‌ அந்த புண்ணிய ஸ்தலத்தின்‌ முக்கியத்துவத்தை மறக்காமல்‌, அங்கு பூஜை செய்து கொண்டிருந்தது தான்‌. என்றோ ஒரு நாள்‌, மீண்டும்‌ அங்கு கோவில்‌ நிறுவப்படும்‌ என்ற நம்பிக்கையிலும்‌, எதிர்பார்ப்பிலும்‌, அவர்கள்‌ அங்கு நித்திய பூஜையும்‌, பிரார்த்தனையும்‌ செய்து கொண்டிருந்தார்கள்‌.

தலைமுறைகள்‌ பல கடந்தும்‌, இடிக்கப்பட்ட அந்த கோவிலை மறக்காமல்‌, நம்‌ நினைவில்‌ இருந்து அதை நீங்க விடாமல்‌, நம்பிக்கையோடு காத்திருந்த, பல இந்துக்களை நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது. தங்கள்‌ ராம்‌ லல்லாவின்‌ கோவில்‌, நிர்மூலமாக்கபட்ட பொழுது, அந்த தலைமுறையினர்க்கு ஏற்படுத்திய கூடிய துயரத்தையும்‌, மன வேதனையையும்‌ நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது.

1885-ல்‌, மசூதிக்கு அருகில்‌ கோவில்‌ கட்ட வேண்டுமென, நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்த மஹந்த்‌ ரகுபீர்‌ தாஸை நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது. 1949-ல்‌, நள்ளிரவில்‌, ராம்‌ லல்லாவை, உபயோகத்தில்‌ இல்லாத அந்த மசூதியின்‌ வளாகத்தில்‌ நிறுவியோரை நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது. விடாமுயற்சியோடு கைங்கர்யத்தில்‌ ஈடுபட்ட ஆயிரக்கணக்கான சேவகர்களை நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது.

போலீஸ்‌ துப்பாக்கி சூட்டில்‌ உயிர்‌ துறந்த கோத்தாரி சகோதரர்கள்‌, மற்றும்‌ நூற்றுக்கணக்கான கர சேவகர்களை நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது. லால்‌ கிருஷ்ண அத்வானிஜியையும்‌, அசோக்‌ திங்கால்ஜியையும்‌, அவர்களுடைய ரத யாத்திரையையும்‌, நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது. நீதுமன்ற தீர்ப்பு சாதகமாக மாறவும்‌, நிலம்‌ தங்களுக்கு இடைக்க வேண்டுமெனவும்‌, இட்டத்தட்ட 30 ஆண்டுகள்‌ பொறுமையோடு காத்திருந்த அடுத்த தலைமுறை இந்துக்களை நினைவில்‌ கொள்ள வேண்டிய தருணம்‌ இது.

நம்‌ முன்‌ சென்ற இவர்கள்‌ அனைவரையும்‌, நினைவில்‌ கொண்டு, நன்றி செலுத்திய பின்னர்‌ - இப்பொழுது, இந்த தருணத்தை, ஆனந்தமாய்‌ கொண்டாடுங்கள்‌. ஏனெனில்‌, இத்தருணம்‌, இந்திய வரலாற்றில்‌ மட்டுமல்ல, நாகரீக வரலாற்றிலும்‌ ஒரு மைல்கல்‌. ஆனந்தமாய்‌ கொண்டாடுங்கள்‌ - ஏனெனில்‌, இதற்கு முன்‌, ஒருவனே தேவன்‌ என்ற கோட்பாடு இல்லாத, மதமாற்றம்‌ ஒன்றே விரிவடைய வழி என பின்‌ தொடராத, எந்த ஒரு நம்பிக்கையும்‌, வாழ்க்கை முறையும்‌, தங்கள்‌ இடிக்கப்பட்டக்‌ கோவிலை மீண்டும்‌ நிறுவியதாக வரலாறு இல்லை. ரோமானியர்கள்‌, கிரேக்கர்கள்‌, எகிப்தியர்கள்‌, ராஸ்ட்ரியர்கள்‌, மாயன்கள்‌, ஆஸ்டெக்‌ மக்கள்‌, பூர்வீக அமெரிக்கர்கள்‌, ஆஸ்இரேலிய பழங்குடியினர்‌ என எவர்‌ வரலாற்றிலும்‌ இது போல்‌ நடந்ததில்லை. நம்‌ சரித்தரித்தில்‌, இது ஒரு தனித்துவமான நிகழ்வு. பெருமை கொள்ளுங்கள்‌.

Input & Image courtesy: நியஸ்

Original article written in English by Arun Krishnan

Translated into Tamil by M. Raghunath

Next Story
கதிர் தொகுப்பு
Trending News